Vairamuthu [Image source : L Hong To Rtai]
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர்.
அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. தற்பொழுது, இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சாதிய ரீதியிலான தாக்குதல் குறித்து பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தற்பொழுது கவிஞர் வைரமுத்து அவர்களும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு, சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது, சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள் அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…