சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் ! தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.பின் நடைபெற்ற விசாரணையில், ‘லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை’ என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்தது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜூன் 26-ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில், தூத்துக்குடி தற்போது ஓரளவு அமைதி திருப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025