எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.! முதல்வர் அறிவிப்பு .!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98)  மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை இயற்கை எய்தினார். கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு ஆக.7ம் தேதி பிறந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பள்ளி படிப்புகளை ஆகவே முடித்துக்கொண்டு, பல்வேறு கல்லூரிகளில் பயின்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி ஆவர். வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவு அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இரங்கல் குறிப்பில், பசிப்பிணி ஒழிப்பு -உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.

மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார். இந்த நிலையில், உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் – வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

8 minutes ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

27 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

46 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

17 hours ago