கடந்த 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்தது.
அதன்படி, கடந்த 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஏப்ரலில் விசாரணைக்கு வரவுள்ளதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…