1,6,9 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது.இதனிடையே பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேரும் 2 முதல் 10 -ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…