நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது குடும்பத்தாருடன் வாக்கு பதிவு செய்தார்.
ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 16-01-2020 அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடுவதா? உடனே திரும்பப்பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பொங்கல் விடுமுறை ரத்து இல்லை .அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வீட்டில் தொலைக்காட்சி இல்லாதவர்கள், ஜனவரி 16ல் பிரதமர் மோடியின் உரையை பள்ளியில் சென்று பார்க்கலாம். இது கட்டாயமில்லை .
பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.நிர்வாக திறனில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.2010-ம் ஆண்டு காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது என்பிஆர் கொண்டுவரப்பட்டது, அரசுக்கு நெருக்கடி தரவே திமுக அதை எதிர்த்து போராடுகிறது.தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுதான் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…