இந்தியாவிலேயே முதல்முறை! தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்!

Omron

தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்.

ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டோக்கியோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒம்ரான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம்.

தமிழ்நாட்டில் ரூ.128 கோடியில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி ஆலையை நிறுவுகிறது ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம். ஒம்ரான் நிறுவனம், தொழிற்சாலை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்