மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
விஜய் எதிர்காலத்தில் ஜனநாயகமுறைப்படி என்ன நிலையை எடுக்கிறார் என்பதைப் பார்த்து அவருக்கு எங்களுடைய தார்மிக ஆதரவு உண்டு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ”MGR, ஜெயலலிதா வழியில் அதே பாதையில் ஓபிஎஸ் வழிநடத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், செப்.,4-ல் மதுரையில் ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடத்தப்படும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்
இதையடுத்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், ”அதிமுகவில் இணைத்துக்கொள்வதாக இருந்தால் எந்தவித நிபந்தனையும் இன்றி இணையத் தயார் என்று அறிவித்துள்ளார். அதேநேரம், செப்.,4-ல் மதுரையில் நடைபெறவுள்ள தமது அணியின் மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“சில முடிவுகளை வெளியே சொல்லலாம், சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது” என்று ஓபிஎஸ் கூறியதாகவும், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன.
தொடர்ந்து பேசிய அவர், ”மதுரையில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மாநாடு வரலாற்றில் மிகப்பெரிய மாநாடாக இருக்கும். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான எங்கள் சட்ட போராட்டம் தொடரும். சட்ட போராட்டத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக அமர முடியும்” என்றார் .
குறிப்பாக, தவெக தலைவர் விஜய் பற்றி பேசிய ஓபிஎஸ், ”கட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை விஜய் நன்றாகவே செயல்படுவதாகவும், அவருக்கு தங்களின் தார்மீக ஆதரவு உள்ளதாகவும்” அவர் கூறியுள்ளார். இதன் மூலம், தவெகவிற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பதாக தெரிகிறது. எதிர்காலத்தில் இபிஎஸ் அதிமுகவில் சேர்க்கவில்லை என்றால், தவெக பக்கம் செல்வது போல் தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025