“மீனவர்கள் பிரச்சனை” – மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த உறுதி!

Published by
Edison

இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனையடுத்து,கைது செய்யப்பட்ட  மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதே சமயம்,கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்,மண்டபம்,புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.இது தொடர்ந்து நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது.இதற்காக கூட்டுக் குழு(joint committee) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.எனினும்,3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கவேண்டிய கூட்டுக் குழு கூட்டம்,கொரோனா காரணமாக தள்ளிப் போனது.விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும்,கூட்டுக் குழு பேச்சுவார்த்தையின் மூலம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் அவர்கள் எல்லை தாண்டி செல்வதுதான் பிரச்சனையாக கூறப்படுகிறது. சர்வதேச எல்லை என்பது 200 நாட்டிக்கல் மைல் உள்ளது,ஆனால்,குறிப்பிட்ட பகுதிகளில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலேயே வருவதால் மீனவர்கள் கைது பிரச்சனை தொடர்ந்து நடைபெறுகிறது.

இனி வருகின்ற காலத்தில்,கூட்டுக்குழு கமிட்டி மூலமாக இதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு.அதன்படி,அந்த நாட்டிற்கான சட்டத்தை கடைபிடித்து மீனவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.விரைவில் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற உறுதியையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago