சென்னையில் 46-ஆவது சுற்றுலா மற்றும் வா்த்தகக் கண்காட்சியை தீவுத் திடல் மைதானத்தில் அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து துறை சார்ந்த புரிதல்கள் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுருக்கிறது.
அதில், சுகாதாரத்துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரத்யேக அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்த விரிவான விளக்கங்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளன. குறிப்பாக, அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவில் இருந்து மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதில் வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் சில நிமிடங்களில் மேற்கொள்ள படுகின்றது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: முழு உடல் பரிசோதனை அரங்கில் ரத்த அணுக்களின் அளவு, ரத்த சா்க்கரை அளவு ஆகியவை ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, அதற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சுற்றுலா கண்காட்சிக்கு செல்வோர் மறக்காமல் சுகாதாரத்துறை அரங்கிற்கு சென்று குறைந்த செலவில் இந்த பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…