வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள், அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்: அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது! கிழக்குக் கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) என்ற நீள முக்கிய சாலைக்கு முத்தமிழ் அறிஞர் ‘கலைஞர் கருணாநிதி சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகரான சீரிய சிந்தனையாளர் விவேக் அவர்களை ‘சின்னக் கலைவாணர்’ என்று அழைப்பதுண்டு. அதை இணைத்து அவர் வாழ்ந்த பத்மாவதி நகரில் உள்ள தெருவுக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் தெரு’ என்றும் பெயர் மாற்றம்-அவரது குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று அரசு ஆணை வந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசையும், நமது முதலமைச்சரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் பாராட்டுகிறோம்.
அரசு கவனத்திற்கு ஒரு முக்கியச் செய்தி: தெருக்களுக்கு, நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டும் போது, கூடுமானவரை அப்பெயர் ஓரிரு சொற்களில் அமைந்தால், அப்பெயர் நடைமுறையில் பல காலம் புழக்கத்தில் இருந்து பெயர் வைக்கப் படுபவர்களுக்குப் பெருமை சேர்க்கும்.
எடுத்துக்காட்டாக ‘‘கலைஞர் கருணாநிதி நகர்’’ என்று வைத்த பெயர் – இன்று ‘கே.கே.நகர்’ என்று ஆகிவிட்டது. ஆனால், கலைஞர் வைத்த அண்ணா நகர் அப்படியே புழங்குகிறது. பேரறிஞர் அண்ணா பல்கலைக் கழகம் என்பது ‘பவுட்’ என்று சுருக்கி அழைக்கப்பட்டது. பிறகு நம்மைப் போன்றவர்கள் அப்போதைய எம்.ஜி.ஆர். அரசுக்கு சுட்டிக்காட்டி, சுருக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்று ஆனது. இந்த அடிப்படையினை பெயர் சூட்டும்போது நடைமுறைப்படுத்தவேண்டும். பெரியார் போக்கு வரத்துக் கழகத்தை TPTC என்று சுருக்கி விட்டனர். இதுபோல எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.’ என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…