அரிக்கொம்பன் தற்போதைய நிலை குறித்து வனத்துறை அறிக்கை.!

Published by
கெளதம்

கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.

இந்நிலையில், அரிக்கொம்பன் காட்டு யானையின் நிலை குறித்து வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 13 நாட்களாக இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்த்துள்ள தாவரங்களை உணவாக உண்டு வருகிறது. 38 முன்களப் பணியாளர்கள்  யானையின் நடமாட்டத்தையும் மற்ற தொடர்புகளையும் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது, யானைக் கூட்டங்களுடனான யானை ஆரோக்கியமாக இருப்பதையும், சோலை மற்றும் புல்வெளி பகுதியில் வசிக்க முயற்சிப்பதையும் தானியங்கி புகைப்பட கருளி மூலம் பெறப்படும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

ரேடியோ காலர் சமிக்கைகள் மூலமும் தற்போதைய கண்காணிப்பு அடிப்படையிலும், அரிக்கொம்பன் யானையானது 1340 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…

12 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!

பாங்காக் :  தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…

29 minutes ago

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

59 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

1 hour ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

2 hours ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

2 hours ago