அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, திண்டுக்கல் சீனிவாசன் உடல்நிலை குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 75 வயதாகுகிறது. இவர் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.