ரம்மி நேரில் விளையாடும் போது திறமைகக்கான விளையாட்டு.! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.!

ஆன்லைன் விளையாட்டுக்கள், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன்ல விளையாட்டு கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தன.
இந்த வழக்குகள் சென்னை தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த மாதம் ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த மட்டுமே மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதனை தடை செய்ய அதிகாரம் இல்லை என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அதேபோல் ஒரு சிலர் ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டை தடை செய்ய முடியாது என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாதிட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 7) சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கின. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடும்போது பொது ஒழுங்கிற்கு இடையூறும் ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என வாதிடப்பட்டது.
அதேபோல் ஆன்லைன் ரம்ம ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போது தான் அதனை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இதனை ஆன்லைன் வழியாக விளையாடும்போது அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விளையாட வைக்கப்படுகிறார்கள்.
இது எப்படி அறிவு சார்ந்த விளையாட்டாக பார்க்கப்படும்.? இது குறித்து ஆன்லைன் நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும் ஆன்லைன் விளையாட்டுக்கான பணம் முழுவதையும் பெற முடியாது. இதன் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.