திராவிட மாடல் என்று எதுவும் இல்லை.! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடும் விமர்சனம்.!

Sellur raju

திராவிட மாடல் என்று ஒன்று இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை சித்திரை திருவிழா நடவடிக்கைகளை பற்றி பல்வேறு விமர்சனங்களைமுன் வைத்தார்.

அவர் கூறுகையில், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட மாடல் என கூறுகிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதனை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அரசு அதனை கட்டுப்படுத்த கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் , மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த 5 உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என தெரிவித்தார். இந்த அரசு அறியாமையில் இருக்கிறது என்றும், இதுவரை சித்திரை திருவிழாவில் உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை என்றும் தற்போது தான் இது போன்று உயிரிழப்புகள் நடக்கிறது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

அடுத்ததாக ஆளுநர் பற்றி பேசுகையில், ஆளுநர் கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், திமுகவினர் ஆளுனரை விமர்சிக்கும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார்.? கேள்வி எழுப்பினர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்