அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.
நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் வழக்கு விசாரணையை வருகின்ற 9-ஆம் தேதி (அதாவது இன்று) ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில், மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளருக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் இருவரும் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்காக நேற்று ஆஜராகாத இரண்டு பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளன.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…