எம்.எல்.ஏ. பழனியை தொடர்ந்து, அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர்களை தொடர்ந்து அவரின் மாமியார் மற்றும் கார் டிரைவரூக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
இதனால் அங்கு 19 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி, மகள், மருமகள், கார் டிரைவர் உள்பட 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவரின் மனைவி விஜயா, மற்றும் மகள் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரின் மாமியார் பாளையம்மாள் மற்றும் கார் டிரைவர் டெய்லிஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…