செந்தில் பாலாஜி மார்ச் மாதம் 3 -ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த 31-ஆம் தேதி சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தினர். இதற்கு இடையில் மத்திய குற்றபிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், மற்றும் தினமும் கையெழுதியிடவும் நிபந்தனை விதித்தது உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.எனவே இன்று செந்தி பாலாஜி ஆஜரான நிலையில் ,, மார்ச் 3-ஆம் தேதி செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு பிறப்பித்து வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து.மேலும் செந்தில் பாலாஜியுடன் அன்னராஜ், பிரபுவும் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…