[File Image]
போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக 420 தாழ் தள பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2,271 பேருந்துகள் வாங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், மகளிர் இலவச பயணத்திற்காக நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் வந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உதார்விட்டுள்ள நிலையில், எப்படி தனியார்மயமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து கழகங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பேசிய அமைச்சர், ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகளுக்கு பின்பு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஜூன் 7-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…