live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

இன்றயை முக்கிய செய்திகள் குறித்த விவரம் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

live tn

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். அந்த தீர்மானத்தின் மூலம் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், முதலமைச்சர் இந்த தீர்மானத்தை முன்மொழிவார்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதால் விவாதம் காரசாரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்