தகைசால் தமிழர் விருது முதல் – சிறந்த மாநகராட்சி, நகராட்சி வரையில்.. தமிழக அரசு விருது பட்டியல்…

Published by
மணிகண்டன்

இன்று 77வது சுதந்திர தின விழாவானது சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி  மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

தகைசால் தமிழர் விருது :

அதன் பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார். திராவிட கழக தலைவர் கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கல்பனா சாவ்லா விருது – அப்துல்கலாம் விருது :

வீரதீர செயல்கள் செய்தோருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது எவெரெஸ்ட் சிகரம் ஏறிய விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது. வேலூரை சேர்ந்த வசந்தாவுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

சமூக சேவை விருது :

சமூக நலன் மற்றும் சிறந்த சேவைக்கான விருது பட்டியலில், சிறந்த தொண்டு நிறுவனமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மகளிர் நலன் சிறந்த சேவைக்கான விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கு வழங்கட்டுள்ளது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது :

சென்னை மாநகர்ச்சியில் சிறந்த மண்டலம்  :

  • முதலிடம் – 9வது மண்டலம்.
  • 2வது இடம் – 5வது மண்டலம்.

சிறந்த மாநகராட்சி :

  • முதலிடம் – திருச்சி ; பரிசு தொகை – 50 லட்ச ரூபாய்.
  • 2ஆம் இடம் – தாம்பரம் ; பரிசு தொகை – 30 லட்சம்.
  • சிறந்த நகராட்சி :
  • முதல் பரிசு – ராமேஸ்வரம்.
  • 2வது இடம் –  திருத்துறைப்பூண்டி நகராட்சி.
  • 3ஆம் இடம் – மன்னார்குடி நகராட்சி.

சிறந்த பேரூராட்சி விருது :

  • முதலிடம் – விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்.
  • இரண்டாம் இடம் – ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
  • மூன்றாம் இடம் – வீரக்கல்புதூர், சேலம் மாவட்டம்.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது (ஆண்கள்) :

  • தஸ்தகீர், நீலகிரி மாவட்டம்.
  • ரா.தினேஷ் குமார், திருச்சி மாவட்டம்.
  • கோ.கோபி, ராணிப்பேட்டை மாவட்டம்.
  • சாகச விளையாட்டு பிரிவு –  பா.ராஜசேகர்.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது (பெண்கள்) :

  • மு.விஜயலட்சுமி, சென்னை மாவட்டம்.
  • சந்திரலேகா, மதுரை மாவட்டம்.
  • கவிதா தாந்தோணி, காஞ்சிபுரம் மாவட்டம்.

முதலமைச்சர் காவலர் விருது :

  • வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க்.
  • கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன்.
  • தேனி மாவட்ட எஸ்.பி டோங்ரே பிரவீன் உமேஷ்.
  • சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன்.
  • நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன்.
  • நாமக்கல் காவலர் குமார்
Published by
மணிகண்டன்

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

15 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

15 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

16 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

16 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

19 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

19 hours ago