நூல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு ..!

திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 26-ஆம் தேதி திருப்பூரில் அனைத்து சங்க, அரசியல் கட்சி, அனைத்து அமைப்புகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025