சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரு தினங்களில் இறைச்சி கடை மற்றும் அத்தியாவசிய கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அதனை கண்டித்து இரு தினங்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று மட்டும் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் நெல்லை மாநகரில் ஏப்ரல் 26 மற்றும் மே 03 ஆகிய 2 தினங்கள் (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என ஆணையர் கண்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…