கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் பின் தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அரசு அறிவித்தது.
இதனைதொடர்ந்து, தமிழக முழுவதும் எவ்வித தளர்வுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளில் (05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டது.இதனால் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…