திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்- புதுக்கோட்டை ஆட்சியர்

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 82,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1079 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புதுகோட்டை மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊரக, நகராட்சி, பேரூராட்சி அமைப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுவிழா நடத்த வேண்டும் என ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025