Vairamuthu [File Image]
கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்’ என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மற்றும் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்க பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வருகிறார்கள். ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஆகியோர் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும். சிலர் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய இரங்கலையும். இந்த சம்பவம் குறித்து கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” எந்தத் தேன் உணவானதோ அதே தேனில் எறும்பும் எந்தத் தண்ணீரில் மலரானதோ அதே தண்ணீரில் தாமரையும் எந்த நதியில் உயிர்கொண்டதோ அதே நதியில் மீனினமும் செத்து மிதப்பது தெரிந்த பின்னும் எந்த மது மறக்கச்செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச்செய்கிறது என்பதனை மறந்தனயே மனிதா!
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் இறப்பின் காரணம் எதுவாயினும் இரங்கத்தான் வேண்டும் சாராயச் சாவுகளுக்காகவல்ல; சந்ததிகளுக்காக” என வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…