Madras High Court. (File Photo: IANS) | IANS
சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரதசகக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் ஆஜராகி விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், விளையாட்டு மைதானங்களில், போட்டி நடக்கும் இடங்களில் மதுபானம் விநியோகிக்கப்படாது. அப்போது மனுதாரர் தரப்பில் குறிப்பிட்ட என்.எல்.ராஜா, மதுவிலக்கு சட்டப்படி பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும், விளையாட்டு மைதானங்கள், பொது அரங்குகளில் மதுபானம் விநியோகிக்க கூடாது என்கிறார்.
அதன்பின் பேசிய தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படவில்லை என விளக்கமளித்தார். இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை டிச.15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…