ஏழை தாய்மார்கள் தான் டார்கெட்.? குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அரசு பெண் மருத்துவர் கைது.!

Published by
மணிகண்டன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள்  தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை  சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

லோகம்மாள் தம்பதியினரிடம், குழந்தை நலம், 3வதும் பெண் குழந்தை என்றெல்லாம் பேச்சு கொடுத்து, இறுதியாக பெண் குழந்தை விற்பனை பற்றி பேசியுள்ளார் . இதில் சந்தேகமடைந்த தினேஷ் – நாகஜோதி தம்பதி உடனடியாக காவல்துறையினரிடம் நடந்தவற்றை கூறி புகார் தெரிவித்துள்ளனர்.

மேற்கூரை இடிந்து விழுந்து…சம்பவ இடத்திலேயே 3 பேர் மரணம்!

இதன்பெயரில் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்டமாக லோகம்மாள் கைது செய்யப்பட்டார். அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதாவது, ஏழை பெண் குழந்தைகள் , அவர்கள் பெற்றோர் பற்றிய விவரங்களை லோகம்மாளுக்கு வழங்குவது மகப்பேறு மருத்துவர் அனுராதா தான் என லோகம்மாள் கூறியுள்ளார். மேலும், இதுவரை சுமார் 10 குழந்தைகளை இவ்வாறு விற்றுள்ளதாகவும், ஏழை குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசி அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அரசு மகப்பேறு மருத்துவர் அனுராதாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விற்கப்பட்ட குழந்தைகள் பற்றி விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

11 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

13 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago