குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 12 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை சிபிஐ விசாரணை செய்தால் தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என்பதால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு முன் திமுக குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த நவம்பர் 25 -ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணையில் ,99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…