வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் ,சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள காட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.ஒரு சிலர் தாங்கள் இருக்கின்ற கட்சியிலே பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறி மாற்று கட்சிக்கு செல்கின்றனர்.இந்நிலையில் வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் மதிவாணன் இன்று திமுகவில் இணைந்தார் .சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,தேமுதிக கட்சி விஜயகாந்த் கையில் இல்லாததே கட்சியை விட்டு வெளியேற காரணம் .தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவருக்கு தெரியாது.41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…