Nilgiris - heavy rain [file image]
நீலகிரி : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, காவல்துறை சார்பாக பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுப்பாட்டு மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர உதவிக்கு கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை :
வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்கிற செய்தி கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உபகரணங்களை கலெக்டர் லக்ஷ்மி பவ்யா பார்வையிட்டார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு,” வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள புவியியல் துறை குழு வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…