வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உற்சாக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்க நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் பழனிசாமி அளித்தார். இதன்பின் பிரதமர் மோடி பல்வேறு திட்டகங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கிய பிரதமர், சென்னைக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி.
சென்னை மாநகரம் அறிவு, ஆற்றல் நிரம்பிய நகரம். பல முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. புதுமை, உள்நாட்டு உற்பத்திக்கு சாட்சியாக இந்த திட்டங்கள் உள்ளன. கல்லணை கால்வாயை சீரமைக்கும் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்ற அவ்வையாரின் பாடலை மேற்கோள்காட்டி பேசினார். நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை. வண்ணாரப்பேட்டை- விம்கோ சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் குறித்த நேரத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூரிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்ப் என்பது சுயசார்பு பாரதம் இலக்குக்கு ஊக்கம் தரும். சென்னை மெட்ரோ விரைவாக விரிவாக்கம் அடைந்து வருகிறது.
சென்னையில் 119 கி.மீ நீளமுள்ள மெட்ரோ திட்டத்துக்கு ரூ63,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தங்க நாற்கர இணைப்பில் அத்திப்பட்டு- எண்ணூர் மார்க்கம் முக்கியமானது. சிறந்த போக்குவரத்து சேவைகள் வணிகத்தை பெருக்க உதவும். 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை மறந்துவிட முடியாது. புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். இந்தியா பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…