போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால், புதிய காவல் நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் பலர் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில் அதிக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படக்கூடிய இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? எனவும் அப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த இடங்களில் 170 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கடத்தல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யக்கூடிய இந்த பகுதிகளில் ரவுடி கும்பல் மற்றும் கூலிப்படையினர் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழக டி.ஜி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பெரும்பாக்கத்தில் புதிய செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் காவல் நிலையத்தை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…