வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதிகாலை 3-4 மணி அளவில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடந்தது.
இது தற்பொழுது வட தமிழகம் மீது நிலைக்கொண்டுள்ளது இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விடுமுறை விவரம்:
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,திருப்பத்தூர்,நீலகிரி, சேலம்,வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,விழுப்புரம்,தருமபுரி,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி ,காரைக்கால்,புதுச்சேரி ஆகிவற்றிற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி ,தருமபுரி,திருப்பத்தூர்,வேலூர் ,ஈரோடு,சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் விடப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும்,மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…