வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்;ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து,செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
“வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்?,சரியான அளவு வரியை சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கம்,அரசாங்கத்தின் திறமை.
எனவே சரியான வரியை வசூலித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.மேலும்,ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது. ஏனெனில்,பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு மட்டுமே ஜீரோ வரி முறை பயன்தருகிறது.மாறாக,ஏழைகளுக்கு பலன் அளிக்கவில்லை “,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…