முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்! நெல்லை துணை ஆணையர் வெளியிட்ட வித்தியாசமான பதிவு!

முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பொது மக்கள் வெளியே வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து நெல்லை துணை ஆணையர், அர்ஜுன் சரவணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வித்தியாசமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், முக கவசத்தை முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘முக கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும். முக கவசம் அணிவோம். சமூகஇடைவெளி பின்பற்றுவோம். கைகளை அடிக்கடி கழுவுவோம். நன்றிடா தம்பி.’ என பதிவிட்டுள்ளார்.
முக கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும். முக கவசம் அணிவோம். சமூகஇடைவெளி பின்பற்றுவோம். கைகளை அடிக்கடி கழுவுவோம். நன்றிடா தம்பி picture courtesy @Stalin__SP #TogetherWeCan pic.twitter.com/hiSFbDZ8U2
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 10, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025