திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் என்ற சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். சுமார் 68 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகில் 90 அடிக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு ரிக் இயந்திரங்கள் மூலம் 45 அடி ஆழத்திற்கு மட்டுமே குழி தோண்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரஜினி , ஹர்பஜன்சிங் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் குழந்தை சுர்ஜித் மீட்டு வர வேண்டுமென எனக் கூறியுள்ளனர். தமிழகத்தின் பல கோவில்கள் , மசூதிகள் , சர்ச்சுகளில் பொதுமக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.
நடுக்காட்டுபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் நேற்று யாரும் தீபாவளியை கொண்டாட வில்லை. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில் ” சுர்ஜித் நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.இது மிகவும் வேதனையான நிகழ்வு. சுர்ஜித் மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் ” என கூறினார்
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…