போலீசாரிடம் அந்த சிறுமி அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். என்னிடம் சொல்லி இருக்கார். பார்க்க பரிதாபமாக இருந்தது அதனால்தான் இறக்கப்பட்டு காதலித்தேன்.
கன்னியாகுமரியை சேர்ந்த 17 வயதேயான சிறுமி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பதாக காணாமல் போன நிலையில், வீட்டிலுள்ளவர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசாருக்கு, அப்பெண் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் 22 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, இரண்டு பேரும் ஓடிவிட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் கோவையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
காவல்துறையினர் இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோ டிரைவர் தனக்கு எயிட்ஸ் இருப்பதாக கூறினார். உடனடியாக போலீசார் அவரிடம், பின்பு ஏன் இந்த பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்தாய் என்று அந்த இளைஞனிடம் கேள்வி எழுப்பினர்.
போலீசாரின் கேள்விக்கு பதிலளிக்க குறுக்கே புகுந்த சிறுமி அளித்த பதிலை கேட்டு போலீசார் மட்டுமல்லாது, அந்த சிறுமியின் பெற்றோரும் வியந்து போயினர். போலீசாரிடம் அந்த சிறுமி அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். என்னிடம் சொல்லி இருக்கார். பார்க்க பரிதாபமாக இருந்தது அதனால்தான் இறக்கப்பட்டு காதலித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பதிலுக்கு, ஒன்றும் விழி பிதுங்கி போன போலீசார்,சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், இளைஞரை போக்சோவில் கைது செய்தனர். பின் இரண்டு பேரும் கோவையில் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிய வந்த நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…