என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு இடையில் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.இதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினி சென்னை திரும்பினார்.ஆனால் அவரது அரசியல் அறிவிப்பு என்னவாகும் என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.
ஆகவே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார்.மேலும் அவரது அறிக்கையில், இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். .என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை.தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்.ரஜினியின் இந்த முடிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ரஜினியின் திரையுலக நண்பராக அறியப்படும் ,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கமல் பேசுகையில்,என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கூறினார்.மேலும் ரஜினி அரசியல் நிலைப்பாடு குறித்து கூறுகையில்,ரஜினி ரசிகர்கள் நிலைதான் எனக்கும்,ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.பிரசார பயணம் முடிந்து ரஜினியை சந்திப்பேன், சந்தித்த பின் உங்களுக்கு நான் சேதி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…