Edappadi K. Palaniswami [Image source : thandoratimes I]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ்,சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 13 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துவிட்டு கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிவிட்டரில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கூறியதாவது ” கள்ளச்சாராயம் அருந்தியதால் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன், சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.
கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது, இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன,அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும், இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…