மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி!

பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார்.
அண்மையில் பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தில் கமலஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு ஓய்வுபெற்ற பின், அவர் தனியாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என நினைத்து, அவர் தேர்தெடுத்துள்ள கட்சியும், அவர் இணைந்துள்ள நேரமும் சரியான சமையத்தில் இருக்கிறது என்பதனால், அவரை தனி மனிதனாக, தமிழனாக நின்று பாராட்டாமல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் கூறுகையில், சந்தோஷ் அவர்கள் இந்த கட்சியில் இணைந்துள்ளதால், இந்த கட்சி நல்லவர்களின் கூட்டமே என நிரூபித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கட்சியில் இணைந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷை, பொது செயலாளராக நியமித்துள்ளார் கமலஹாசன்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025