வாக்காளர் அடையாள அட்டை ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாகும், அந்த அட்டையை வைத்துதான் நம் ஓட்டை பதிவிட்டு எதிர்காலத்தை தீர்மானிப்பதாகும். இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். அதற்காகத்தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த 11 ஆவணங்களை காட்டி நீங்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என அறிவித்தது. அதாவது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 100 நாள் பணி கார்டு, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், மற்றும் வாக்காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுதொடர்பான சட்டபூர்வ ஆணையையும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…