ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கவுந்தபாடியை சேர்ந்தவர் செல்வன், இதேபோல் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை இந்த செல்வன் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் அவர்களை கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியில் செல்வனை மீட்டனர். காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார். இதில், இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். இதனை அடுத்து, காவல்துறையினர் ஆலோசனைநடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…