இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

Published by
Ramesh

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்திய திரையுலகில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இசைஞானி இளையராஜா.
இவரின் மகள் பவதாரிணி (47) தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அதற்கான  சிகிச்சையை இலங்கையில் இருந்தபடி எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தைப்பூச நாளில் கோயில் தேர் சரிந்து விழுந்து விபத்து.!

மறைந்த பவதாரிணிக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இருவருமே பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர்.
பவதாரிணியின் கணவர் பெயர் சபரிராஜ் ஆகும். பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடியதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளார் பவதாரிணி. குறைந்த வயதில் பவதாரிணி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Ramesh

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

17 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

20 hours ago