Income Tax Department logo [File Image]
நேற்று சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மருந்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சென்னை கிண்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், வேப்பேரி கே.வி.எண்டர்பிரைசஸ் பார்க்டவுன் கவரலால் & கோ உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சோதனை நிறைவு பெற்ற பின் தன கைப்பற்ற ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும்.
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…