இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த மான் கி பாத் எனும் நிகழ்ச்சியை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில் தொடங்கினார். இந்த பிரதமரின் பேச்சு இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடமும், கடைகோடி மக்களிடமும் கொண்டு சேர்க்க அனைத்திந்திய வானொலி வாயிலாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த உரையானது, ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அகில இந்திய வானொலியில் பிரதமர் உரையாற்றுகிறார். பிரதமரின் இன்றைய உரையில், இந்தியாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடடிக்கைககள் குறித்தும், வைரஸை கட்டுப்படுத்த இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊராட்சி பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது நமது பிரதமர் முதல் முறையாக உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…