மார்ச் 4-ம் தேதி மறைமுகத் தேர்தல்.. நாளை மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து, மேயர்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில், பிப்ரவரி 19-ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதுபோன்று 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையர் வெளியிட்டுயிருந்தார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, செலவினங்களை கண்காணிப்பது, பறக்கும் படை அமைத்தல், பதற்றம் நிறைந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…

29 minutes ago

கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…

55 minutes ago

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…

1 hour ago

”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…

2 hours ago

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

2 hours ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

2 hours ago