மகா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் அரபிக் கடலில் கியார் புயலும் ,லட்சத்தீவு கடலில் ‘மகா’புயலும் உருவாகியுள்ளது. முதலில் உருவான கியார் புயல் தற்போது வலுவிழந்து வருகிறது.இதன் தீவிரமும் குறைந்துவிட்டது.
இதேபோல் மகா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு வடமேற்கு திசையில் நகரும்.
இந்த புயல் எதிரொலியாக லட்சத் தீவு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் மகாவின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரியில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…