சென்னை:61-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் இன்று விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.61-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கிடையில்,பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை,நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க,வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…