75 ஆண்டுகளில் இல்லாத அவமானம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டிருக்கிறது. இது மோடி ஆட்சிக்கு தலைகுனிவா, இல்லையா? என்று கே.எஸ் அழகிரி விமர்சனம்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தை, அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள சுமார் 72 லாக்கரில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளும் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் தங்கம் பதிகப்பகை வைக்கப்பட்ட லாக்கர்கள் திறக்கப்பட்டது.
சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மயமாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ. மீது விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர் அதிகாரி தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் ரூ.45 கோடி மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயம். சி.பி.ஐ. மீது விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 75 ஆண்டுகளில் இல்லாத அவமானம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டிருக்கிறது. இது மோடி ஆட்சிக்கு தலைகுனிவா, இல்லையா? என்று விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…